Vector calculus படிக்கும் போது நம்மில் பலருக்கும் எழும் சந்தேகம்.
Electric currentக்கு direction இருக்கிறது, ஆனால் அது scalar எனப்படுகிறதே. ஏன்??
- ஒருவரின் weight என்னவென்று கேட்டால் $70$kg என்று scalarல் பதிலளிக்கிறோம். ஆனால் physics bookஐ புரட்டிப் பார்த்தால் weight is a vector quantity!!!
- Area, length போன்ற quantities எல்லாம் சில இடங்களில் scalar ஆகவும் சில இடங்களில் vector ஆகவும் வரையறுக்கப்படுகிறதே ஏன்??'
இது போன்ற பல சந்தேகங்களுக்கு இந்தப் பகுதியில் விடை காண முயல்வோம்.
🌾Magnitude
Magnitude (எண்ணளவு) என்பது ஒரு quantityயின் அளவைச் சொல்ல பயன்படுவது.
Magnitudeஐ சொல்ல நமக்கு ஒரு number (eg: 10, 20, etc) தேவைப்படுகிறது. கூடவே அந்த எண் எதைக் குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்த அந்த quantityக்கான unit தேவைப்படுகிறது (eg: metre, celsius, seconds, etc)
" To represent the Magnitude of a physical quantity, we need a number and its unit"
"Temperature = $300 \; kelvin$"
🌾Direction:
ஒரு பொருள் எவ்வாறு நகர்கிறது என்பதை வைத்து நடைமுறையில் நாம் பயன்படுத்தும் சில திசைகள் பின்வருமாறு,
"Forward - Reverse"
"Up - Down"
"East - West - North - South"
👉Quantities with only ONE possible direction:
Example 1:
வெளியே விளையாடிக் கொண்டு இருக்கும் போது, நண்பன் ஒருவன் திடீரென,
"டேய் வானத்த பாருடா, இருட்டிக்கிட்டு வருது"
என்று சொன்னால் நாம் வானம் எங்கே இருக்கிறது என்று தேடப் போவதில்லை. மாறாக நாம் உடனே மேலே தான் பார்க்கப் போகிறோம்.
Look at the sky என்று சொன்னாலே போதும், Look up at the sky என்று direction உடன் சேர்த்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.
Example 2:
நீங்கள் வசிக்கும் தெருவில் post office இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
👴"தம்பி.. இங்க post office எங்கப்பா இருக்கு???"
👦"பத்து வீடு தள்ளி போனீங்கனா வரும் தாத்தா"
இப்படி அடிக்கடி எல்லோரும் உங்களிடமே address கேட்கிறார்கள் என்கிற கடுப்பில் ஒரு board வைக்கிறீர்கள்.
மேலே இருக்கிற boardஐ பாருங்கள்.
Question:
இந்த boardல் post office $10$ blocksக்கு பக்கத்தில் ஒரு arrow mark இருக்கே. அது தேவையா??
ஒரே தெரு, straight road, $10$ blocksனு மட்டும் எழுதி இருந்தா நமக்கு புரியுமா புரியாதா??
இங்கே direction mention பண்ண வேண்டிய அவசியம் இருக்கிறதா என்றால், இல்லை!!!
Real life example:
மேலே இருக்கும் மைல்கல்லைப் பாருங்கள். ரெட்டணை $3$ என்றால் என்ன அர்த்தம்?. நீங்கள் போகும் திசையிலேயே, முன்னோக்கி $3\;km$ சென்றால் ரெட்டணை கிராமம் வரும்.
இங்கே arrow mark போட்டு திசை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது,
ஒரே ஒரு direction மட்டுமே உள்ள quantitiesக்கு அதன் direction represent செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Direction இருந்தாலும் அதை represent செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போவதால், இந்த வகை quantitiesஐ நாம் scalar என்றே குறிப்பிடலாம்.
"Quantities with only one direction = scalar"
👉Quantities with TWO possible directions:
Note: Two possible directions = two opposite directions
"Forward - Reverse"
"Up - down"
Example 1:
நீங்கள் வசிக்கும் தெருவில் post office இருப்பதைப் போல, reverse directionல EB office இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரண்டையும் சேர்த்து Post office $+10$ blocks EB office $-5$ blocks என்று board வைத்தால் உங்களுக்கு புரியுமா புரியாதா?
Of course, we can understand it right?
Board இருக்கும் இடத்தில் இருந்து forward directionல $10$ வீடு தள்ளிப் போனால் post office, reverse directionல் $5$ வீடு தள்ளிப் போனால் EB office.
இங்கே இருக்கும் கேள்வி என்னவென்றால், இரண்டு direction மட்டுமே கொண்டுள்ள ஒரு quantityஐ represent செய்ய direction தேவைப்படுகிறதா? அல்லது magnitude மட்டுமே வைத்து வேறுபடுத்திக் காட்டிவிட முடியுமா??
Magnitudeல் இருக்கும் positive and negative sign ($+$ $-$) வைத்தே அது forward direction or reverse direction என்று கூறிவிட முடியும்.
"+10 = 10 magnitude in forward direction"
"-5 = 5 magnitude in reverse direction"
Magnitudeல் இருக்கும் positive and negative sign வைத்தே, இரு வேறு திசைகளை நாம் வேறுபடுத்திக் காட்டிவிட முடியும் எனும் போது, அங்கே தனியாக direction என்று ஒன்றை represent செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
எனவே quantities with two possible (opposite) directions = scalar.
Scalar vs Vector topicல், scalar = magnitude only, no direction என்று படித்தோம். தற்போது scalarக்கான definition கொஞ்சம் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
ஒரு quantityக்கு direction இல்லையென்றால் அது scalar, also ஒரு quantityக்கு direction இருந்தாலும் அதை நாம் represent செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போவதாலும், அது scalar என வரையறுக்கப்படுகிறது.
எனவே quantities with no direction, one direction or two opposite directions அனைத்தையும் நாம் scalar எனக் குறிப்பிடலாம்.